கொழும்பில் சட்டவிரோதமாக குப்பைகளை வீசிய 160 பேர் கைது

222 0

இந்த மாதத்தின் கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக குப்பைகளை வீசிய 160 பேர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும்,இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு வடக்கில் 20 பேரும்,மத்திய கொழும்பு-34, கொழும்பு தெற்கு-12 நுகேகொட-40,கல்கிஸ்ஸ-10,கம்பஹா-18,களனி-13 நீர்கொழும்பு-12 ,பாணந்துறையில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment