திருகோணமலை – பாலையூற்று பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து 22 வயதான குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து 100 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்கேக நபர் வழங்கிய தகவலை வைத்து அநுராதபுர சந்தியில் மூதூர் பாலைநகரைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் 1100 கிராம் கேரளா கஞ்சாவுடனும், அவர் வழங்கிய தகவலுக்கு அமைய மரத்தடிச் சந்தி, கொத்தி ஒழுங்கையில் வைத்து மேலும் 250 கிராம் கேரள கஞ்சாவுடன் 30 வயதான நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரையும், 1450 கிராம் கேரள கஞ்சாவையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருகோணமலை தலைமை பொலிஸாரிடம், விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஒப்படைத்தனர்.

