கிணற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி!

443 0

திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில், நீராட சென்ற இரண்டு மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக, உப்புவெலி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை, வரோதி நகர் உப்புவேலியை சேர்ந்த எம்.ஹேமதரன் (வயது 16) மற்றும் முதலாம் ஒழுங்கை ஆனந்தபுரியை சேர்ந்த கே.பவிராஜ் (வயது 16) ஆகிய இருவருமே, இவ்வாறு கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நண்பர்களான மேற்படி இருவரும் இன்று பகல், ஆனந்தபுரியிலுள்ள பொதுக் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றபோதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும்  திருகோணமலை செல்வநாயகபுரம் , இந்து மத்திய கல்லூரியில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சடலங்கள் தற்போதைய நிலையில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில், உப்புவெலி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment