சமுர்த்தி உதவுத்தொகை பயனாளிகள் ஆர்பாட்டம்

535 0

நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி உதவுத்தொகை அட்டை கிடைக்கப் பெறாத பயனாளிகள் ஆர்பாட்டமொன்றில் ஈடுட்டனர். 

தலவாக்கலை சமுர்த்தி காரியாலயத்திற்கு அருகிலே இன்று (11) காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2015 ம் ஆண்டு சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட சமுர்த்தி உதவுத்தொகை பெறுவோர் தெரிவில் தலவாக்கலை பிரதேத்தை சேர்ந்த 519 பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு பதிலாக வேறு பெயர்கள் உள்வாங்கப்பட்டுளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

புதிய கணிப்பீட்டில் படி இதுவரை காலமும் சமுர்த்தி உதவுத்தொகை பெற்றுவந்த தமக்கு அநீதீ இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a comment