யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசத்தில் இரு காவற்துறை அதிகாரிகள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் யாழ்ப்பாணம் – வல்வெட்டிதுறை மற்றும் கொக்குவில் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

