நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சர்களின் செயற்பாடு தடையாக இருக்குமாயின், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
கடந்த அரசாங்க காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் தாமதமாவதற்கு நீதி அமைச்சர் காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வினவியபோதே இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.க்கள் சிலர் ஒன்றிணைந்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருவதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

