மத்திய செயற்குழு கூட்டம்: 5 பேருக்கு அழைப்பு இல்லை- வெல்கம எம்.பி.

361 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்று (10) ஏற்பாடு செய்திருந்த மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள  தான் உட்பட ஐந்து செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தான் கட்சியின் மத்திய செயற்குழுவில் உப தலைவர். பவித்ரா வன்னியாராச்சி, சீ.பீ. ரத்னாயக்க, மஹிந்த யாபா அபேகுணவர்தன மற்றும் ஜனக பண்டார தென்னகோன் ஆகியவர்கள் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்கள் ஆவார்.

அனைத்து மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கும் தனக்கு அழைப்பு விடுப்பதாகவும் இருப்பினும், நேற்றைய கூட்டத்துக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அறிந்துகொள்ள கட்சிச் செயலாருக்கு அழைத்தேன். தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் குறுந்தகவல் ஒன்றை அனுப்பினேன். இதற்கும் பதில் கிடைக்கவில்லை.

மத்திய செயற்குழுவில் அனைவரும் அழைக்கப்படாமல் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்த ஏற்புடைமையில் பிரச்சினை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment