இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அரசாங்கத்தினால் பலிகடாவாக்கப்பட்டுவிட்டதாக மகிந்த அணியினர் அறிவித்துள்ளனர்.மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
பிணைமுறி விநியோக மோசடி குற்றச்சாட்டை அடுத்து ரவி கருணாநாயக்க பதவி விலகினார்.
அவருக்கு எதிராக மகிந்த அணியினரே நம்பிக்கையில்லா பிரேரணையையும் கொண்டுவந்திருந்தது.
அரசாங்கம் தமது கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவரை பதவி விலக நிர்பந்தித்துள்ளதாக டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தாம் சட்ட வல்லுனர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும், மகிந்த தரப்பினரிடம் இருந்துநாட்டை பாதுகாக்கும் நோக்கிலேயே பதவி விலகுவதாக ரவி கருணாநாயக்க நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

