வாகனப் போக்குவரத்து தண்டப்பணம் அதிகரிப்பு அமைச்சரவை அங்கீகாரம்

220 0
வீதி சட்டத்திட்டங்களை மீறி செயற்படும் வாகனங்களுக்கான தண்டப்பணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இந்த நிலையில்,ஆகக் குறைந்த தண்டப்பணமான 1500 ரூபாய் 2000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றை ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான யோசனையானது போக்குவரத்து அமைச்சர் நிமல்ஸ்ரீபா டி சில்வாவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி,போதையில் வாகனம் செலுத்துதல், வாகன அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்தல்,உள்ளிட்ட குற்றங்களுக்கான ஆகக் கூடிய 25,000 ரூபாய் தண்டப்ணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7 குற்றங்களுக்காக ஆகக்குறைந்த தண்டப்பணமாக 25,000 ரூபாவை வசூலிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில்,இதற்கு பஸ் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதனையடுத்து இதுதொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் குழு ஒன்று நியமிக்கப்பட்டதுடன்,குறித்த குழுவின் அறிக்கையானது கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment