வைத்தியகல்வியின் குறைந்தபட்ச தரம் வெகுவிரைவில் வர்த்தமானியில் 

203 0

வைத்தியக்கல்வியின் குறைந்த பட்ச தரத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு பல வருடங்கள் தாமதப்படுத்தியது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வைத்தியதுறையின் குறைந்தபட்சத் தரத்தை வர்த்தமானியில்  வெளியிடுவதை தாமதப்படுத்த சுகாதார அமைச்சு முயல்வதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.

எனினும் குறித்த குற்ற்ச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும்,இதுதொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலை வைத்திய சங்கம் புறக்கணித்துவிட்டு ஊடக சந்திப்புக்கள் மூலம் மக்களை அரச வைத்திய சங்கம் தவறாக வழிநடத்துவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment