மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த பேருந்தொன்று கோட்டைக்கல்லாறு பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த வேளை, கல்முனையிலிருந்து சென்ற பேருந்தொன்றும் மட்டக்களப்பிலிருந்து பொருட்கள் ஏற்றிவந்த சிறியரக வாகனமும் , மற்றுமொரு வாகனமும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் கோட்டைக்கல்லாறு பேருந்து தரிப்பிடத்தில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் தள்ளுமுள்ளு பட்டு ஏற்பட்ட இவ் விபத்தானது தெய்வாதீனமாக பெரும்சேதங்கள் ஏற்படாமல் சிறியளவிலான விபத்தாகவே அமைந்தது.
இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதற்கு சாரதிகளின் கவலையீனங்களும், பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக செல்லுவதும் முக்கிய காரணமாக அமைகிறது.

