இரு அணிகளும் விரைவில் இணைகிறதா? – அ.தி.மு.க தலைமையகத்தில் முதல்வர் தீவிர ஆலோசனை

229 0

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரு அணிகளையும் இணைப்பது குறித்து நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க மூன்று அணிகளான உடைந்த பின்னர் இன்று காலை அ.தி.மு.க தலைமையகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென வருகை தந்தார். அவருடன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்துள்ளனர். இரு அணிகளும் இணைப்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு அணிகளும் இணையும் பட்சத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும், அவரது அணியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்க முதல்வர் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தற்போது உள்ள சூழ்நிலையில் இரு அணிகளும் இணைந்தால் தான் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முடியும் என்பதை சில நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களது தரப்பு நிபந்தனைகளை முதல்வரிடம் எடுத்துச் சொல்வார்கள் என்று கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக எந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளும் நடக்காத நிலையில் இன்று கூடியுள்ள கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால், மீண்டும் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

Leave a comment