யாழில் கைதானவர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்….

237 0

யாழ்ப்­பாணம் வட­ம­ராட்சி துன்­னாலை பிர­தே­சத்தில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்­கொண்ட  சுற்­றி­வ­ளைப்பின் போது கைது செய்­யப்­பட்ட 24 பேரின் உற­வி­னர்கள் நேற்­றைய தினமும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் யாழ்.பிராந்­திய அலு­வ­ல­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

யாழ்ப்­பா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்துக் காணப்­பட்ட, வாள்­வெட்டு மற்றும் சமூகவிரோத சம்­ப­வங்­களை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய விசேட சுற்­றி­வ­ளைப்புத் தேடுதல் மூலம் பலர் கைதுசெய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் வட­ம­ராட்சி பகு­தியில் விசேட அதி­ரடிப்படை­யினர் மற்றும் பொலி ஸார் இணைந்து இரு நாட்­க­ளாக மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்பு தேடு­தலின் போது மொத்­த­மாக 42 பேர் கைதுசெய்­யப்­பட்­டனர். இவர்­களில் 24 பேர் துன்­னாலைப் பகு­தியில் வீடு­வீடாக நடை­பெற்ற சுற்­றி­வளைப்பு தேடு­தலில் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு துன்­னா­லையில் கைதா­னவர் ­களின் உற­வி­னர்­க­ளினால் மேற்­படிக் கைதுக்கு எதி­ராக இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் யாழ்.பிராந்­திய அலு­வ­ல­கத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. தமது உற­வுகள் சுற்­றி­வ­ளைப்பின் போது, வீடு­களில் வைத்தே கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர், அவர்கள் எந்தக் குற்­றத்­தி­னையும் புரி­ய­வில்லை, குற்றம் செய்த­வர்கள் என்று தேடப்­பட்­ட வர்கள் தற்­போது தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில், வீட்டில் இருந்­த­வர்­க­ளையே சுற்­றி­வ­ளைப்பின் போது கைதுசெய்து சென்­றுள்­ளனர்.  கைது செய்து அழைத்துச் செல்­லப்­பட்­ட­வர்கள், அன்­றாடம் கிடைக் கும் வேலை­களைச் செய்து, அதில் வரும் பணத்­தினைக் கொண்டே நாம் நாளாந்த தேவை­களை பூர்த்தி செய்­கின்றோம். இவர்கள் கைதுசெய்­யப்­பட்­டி­ருப்பதால் எமது குடும்­பத்தின் நாளாந்த தேவை­களை பூர்த்தி செய்ய முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது. இவர்­களின் கைதா­னது உரிமை மீற­லாகும். அவர்­களை விடு­தலை செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தே அவர்கள் இம்­மு­றைப்­பாட்­டினை பதிவுசெய்­துள்­ளனர்.

குறித்த முறைப்­பாடு தொடர்பில் இல ங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு வின் தலைமைச் செய­ல­கத்­திற்கு அனுப்பப் ­பட்டு, இதுதொடர்பான நடவடிக்கையை துரிதகதியில் முன்னெடுக்கப்படும் என்று முறைப்பாட்டினை பதிவுசெய்தவர்களிடம் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் உறுதி யளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment