டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகிறது – சுகாதார அமைச்சர்

234 0

இலங்கையில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் டெங்கு தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் அறை கடந்த 7ஆம் திகதியில் இருந்து மூடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறி;;பிட்டார்.

டெங்கு நோயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் குறுகிய கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் பத்தரமுல்லையில் இடம்பெற்றது.

அதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் டெங்கு தொற்று நிலவும் காலநிலையுடன் பாதக நிலையை தோற்றுவித்ததாக குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 741 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment