தற்போது அரசாங்கம் சரியான பாதையில் செல்கிறது – நிதி அமைச்சர்

595 0
மனித உரிமைகளை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றப்படும் போது இலங்கையில் பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் என்பன பெரும் சவால்களாக இருந்தன.
தற்போது இந்த விடயங்கள் சரியான முறையில் அணுகப்பட்டுள்ளன.
இன்னும் பல செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டி இருப்பினும், தற்போது அரசாங்கம் சரியான பாதையில் செல்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment