இந்திய படையினரை மீள பெற வேண்டும் – சீன ராணுவம் 

251 0

சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, பூடான் எல்லைகளின் முச்சந்திப்பில் டோக்லாம் உள்ளது.

இதில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
இது ஒரு தலைப்பட்சமானது, எல்லை பிரச்சினையில் தீர்வு காணுகிற வரையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறுவதாகும் என இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.

சீன ராணுவம் அடாவடியாக சாலை அமைக்கத் தொடங்கியது,
வட கிழக்கு மாநிலங்களை நாம் சென்றடைவதை துண்டித்து விடும் என இந்தியா அஞ்சுகிறது.

சீனாவின் நடவடிக்கைக்கு பூடானும் எதிர்ப்பு தெரிவித்தது.
எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா, தனது ராணுவத்தை குவித்தது. இந்தியாவும் படைவீரர்களை குவித்தது. இதன் காரணமாக எல்லையில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்திய ராணுவத்தினர் எல்லையில் பகுதியில் இருந்து மீள பெறப்பட்டால் மாத்திரமே அமைதி நிலவும் என சீன இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment