மலேசியாவில் 400 பேர் கைது

330 0

மலேசியாவில் நடத்தப்பட்ட தீவிரவாத முறியடிப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கோலாலம்பூரில் இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கைதானவர்கள் பெரும்பாலும் பங்களாதேஸ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களிடம் இருந்து போலிக்கடவுச் சீட்டுகளை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் போலியான குடிப்பெயர்வு ஆவணங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் தென்கிழக்காசிய போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment