சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகுவதாக அறிவிப்பு

364 0

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, கட்சியின் மாகாண உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் இந்தப் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களிடையேயான கலந்துரையாடல் நேற்று மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவு கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் உடனடியாகவே அனுப்பி வைக்கப்பட்டது. கட்சியின் மத்திய செயற்குழு, அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை அங்கீகரித்து உறுப்பினர்களுக்கு அறிவித்ததும், அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து விலகுவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் , சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

Leave a comment