இலங்கை கடற்படை கைது செய்த 4 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 4 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் மீன்பிடிக்க சென்றபோது கடந்த 8ஆம் திகதி நள்ளிரவு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தற்போது இலங்கையின் காங்கேசன்துறை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் சமீபத்திய நடவடிக்கைகள் தமிழக மீனவர்கள் மனதில் அச்சத்தையும் நிம்மதியின்மையையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்கும் உரிமையை பாதுகாக்கும் வகையிலும், அவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு இலங்கைக்கு ஓர் உறுதியான தீர்க்கமான செய்தியை தெரிவிக்க வேண்டும்.
இந்தியா-இலங்கை இடையே 1974 – 1976 ஆண்டுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழியாகும்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன்.
அதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இலங்கை அரசு மீனவர்களை விடுவித்தாலும் அவர்களது படகுகளை விடுவிப்பதில்லை.
அவற்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 4 மீனவர்கள் மற்றும் இதுவரை பறிமுதல் செய்த 103 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

