உமா ஓயா தாக்கம் – பண்டாரவெல திக்அராவ பகுதியில் 50 வீடுகள் அபாய நிலையில்

224 0

உமா ஓயா திட்டத்தின் பாதிப்பு காரணமாக பண்டாரவெல திக்அராவ பிரதேசத்தின் 50 வீடுகள் மிகுந்த அவதான நிலைக்குள்ளாகியிருப்பதாக தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களில் திக்அராவ, அலுத்கம போன்ற பிரதேசங்களில் நடாத்திய பரிசோதனைகளின் போதே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த வீடுகளில் உள்ளவர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று செல்லுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் 300 க்கும் அதிகமான வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த வீடுகள் தொடர்பில் மேலதிக பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நோர்வே நாட்டிலிருந்து இலங்கை வந்திருக்கும் விசேட குழுவும் உமா ஓயா திட்டத்தினால் தொடர்ந்து எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment