வானாகிரை ரேன்சம்வேர் தாக்குதலை தடுத்து நிறுத்த உதவியவர் அமெரிக்காவில் கைது

317 0

உலகெங்கும் பல்வேறு நிறுவனங்களையும் பாதித்த வானாகிரை ரேன்சம்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வழிமுறையை கண்டறிந்தவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் பெரும் நிறுவனங்களை வெகுவாக பாதித்த பாதித்த வானாகிரை ரான்சம்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழிமுறையை கண்டறிந்த ப்ரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் வல்லுநரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மார்கஸ் ஹட்சின்ஸ் உலகை அச்சுறுத்திய ரான்சம்வேர் மால்வேரினை செயல் இழக்கச் செய்யும் வழிமுறையை (kill switch) கண்டறிந்தார். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், வங்கி மற்றும் மருத்துவமனை சேவைகள் வானாகிரை ரேன்சம்வேர் மூலம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

உலக நிறுவனங்களை அச்சுறுத்திய ரேன்சம்வேர் பாதிப்பில் இருந்து அனைவரையும் விடுவித்த ஹட்சின்ஸ் மால்வேர்டெக் என்றும் அறியப்படுகிறார். இந்நிலையில், ஹட்சின்ஸ் அமெரிக்காவின் நெவாடா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

23 வயதான ஹட்சின்ஸ் கைது செய்யப்பட்டதற்கான காரணம் விரிவாக அறியப்படாத நிலையில் லாஸ் வீகாஸ் மெக்காரன் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவருடன் பணியாற்றும் டெஃப் கான் தெரிவித்துள்ளார்.

இருவரும் லாஸ் வீகாஸ்-இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்கா வந்ததாக டெஃப் கான் தெரிவித்தார்.

Leave a comment