நல்லூரில் கொல்லப்பட்ட காவல்துறை அலுவலரின் மனைவிக்கு மீண்டும் காவல்துறையில் இணைய அனுமதி

320 0

யாழ்ப்பாணம் நல்லூர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட காவல்துறை அலுவலரின் மனைவி மீண்டும் காவல்துறையில் இணைந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை தேசிய காவல்துறை ஆணைக்குழு இன்று வழங்கியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வைத்து கடந்த தினம், யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காவல்துறை அலுவலர் ஒருவர் பலியானார்.

மற்றுமொருவர் காயமமைந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தில் பலியான காவல்துறை அலுவலரின் மனைவிக்கு மீண்டும் காவல்துறையில் இணைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவர் காவல்துறையில் கடமையாற்றி வந்த போதிலும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக சேவையில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment