இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற வாழ்வில் 40 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து தெரிவிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு விசேட நாடாளுமன்ற அமர்வொன்று இன்று இடம்பெறவுள்ளது.
விசேட நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் இன்று காலை 9.15 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

