வித்தியா கொலை வழக்கு – டி.என்.ஏ விடயம் 

302 0

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் வித்தியாவின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மயிர் துண்டுகள் மூன்றிலும் உள்ள மரபணுவுடன் நான்காவது  சந்தேகநபர் தொடக்கம் ஒன்பதாவது சந்தேகநபர் வரையான யாருடைய மரபணுவும் ஒத்துப் போகவில்லை.

இவ்வாறு இந்த வழக்கில் மரபணு சான்று பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்த ஜீன்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி ரூவான் இளைய பெரும ரயலட்பார் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

இவரது சாட்சிப் பதிவின் படி, மரபணு சான்று பொருட்களான மயிர் துண்டுகளுக்கு உரிய நபர், முதலாம் இரண்டாம் மூன்றாம் சந்தேகநபர்கள், மற்றும் இறந்த பெண்ணின் தாயார் ஆகிய மூவரும்  ஒரே தாய் வழி மூலத்தை கொண்டவர்கள் என்பது ஆய்வினூடாக கண்டுபிடிக்கப்பட்டது என சாட்சியமளித்துள்ளார்.

Leave a comment