
காஷ்மீர் விஷயத்தில் தயக்கம் எதுவுமில்லாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனாவுக்கு கடமைப்பட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா தெரிவித்துள்ளார்.
சீன இராணுவத்தின் 90ஆம் ஆண்டு விழாவை அந்த நாட்டு அரசு கொண்டாடியது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள சீன தூதரகத்திலும் கடந்த திங்கள்கிழமை இதற்கான கொண்டாட்டம் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா பங்கேற்றார்.
அதன்போது அவர் காஷ்மீர் பிரச்சினை, அணு விநியோக கூட்டமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தானை உறுப்பினராக்கும் முயற்சி போன்ற முக்கிய விஷயங்களில் தயக்கம் இல்லாமல் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது.
அதற்காக சீனாவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

