வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து திட்டங்களும் தயராக உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரிய தனது அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனால் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் வடகொரியாவின் செயலுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், வடகொரியாவின் அணுஆயுத சோதனைகளை தடுப்பதற்கு பல திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

