டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு 

324 0

டெல்லியில் நேற்று 18வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இவர்களை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் 2ஆம் கட்டமாக கடந்த ஜூலை 16ஆம் திகதி முதல் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகிக்கிறார்.
நதிகள் இணைப்பு, விவசாயிகள் கடன் ரத்துச்செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக விவசாயிகளுடன் கடந்த 26ஆம் திகதி புதுச்சேரி மாநில விவசாயிகள் கூட்டமைப்பினரும் இணைந்தனர்.
இதன் தலைவர் செந்தில்குமார் தலைமையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 35 விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரி விவசாயிகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அப்போது புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.

Leave a comment