தூர்வாரும் நீர்நிலைகளை பார்க்கும் உரிமை உள்ளது – ஸ்டாலின் 

292 0

திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கு தூர்வாரும் நீர்நிலைகளை பார்வையிடும் உரிமை தனக்கு உள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனது தொகுதியான சென்னை கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் நடைபெற்று வரும் பணிகளை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

எடப்பாடி தொகுதியில் தூர்வாரிய ஏரியை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னையா அல்லது கௌரவப் பிரனையா என்று உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.

அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதை நான் விமர்சிக்கக் கூடாது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்ல, சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அங்கு சென்று ஆய்வு செய்யும் உரிமை இருக்கிறது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment