இலங்கையில் நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நீர்நிலைகள் பலவற்றின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்படுவதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ரந்தெனிகலஇ விக்டோரியஇ கொத்மலைஇ சமனலவௌ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக குறைவடைந்துள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
காசல்ரீ மற்றும் மவுசாக்கல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து நிலவுகின்றது.
ரஜரட்ட நீர்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ 17 மாவட்டங்ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி காலநிலை காரணமாக 3 லட்சத்து 53 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 12 லட்சத்து 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்;த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 210ஈ கிராம அலுவலகர் பிரிவில் 150க்கும் அதிகமான குடும்பங்கள் குடிநீர் இன்றி கடும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
பல கிலோமீற்றர் தூரம் சென்று வற்றிய குளங்களில் சிறிய ரக பாத்திரங்களை கொண்டு நீரை பெற்று கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் 90 சதவீதமான சிறு குளங்கள் தற்போதைய நிலையில் வற்றியுள்ளன.
வறட்சியினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் இதற்கான விபரங்களை கொழும்பிற்கு அனுப்பி உள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ வறட்சி காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கு சிக்கல் ஏற்பட்டாலும் மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

