இந்திய மீன்வர்கள் இலங்கையில் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில், பிரதமர் மோடி தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று ராஜ்யசபாவில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பிரதமர் மோடி மீனவர் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்துகிறார்.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டு 251 மீனவர்களையும், 42 படகுகளையும் விடுவிக்க முடிந்ததாக சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

