தற்போதுள்ள தமிழக அரசானது ஊழல் மிகுந்த அரசு என்பதே மக்களின் கருத்தாக உள்ளது என தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிளவடைந்த அ.தி.மு..கவின் இரு அணிகளையும் மீண்டும் இணைப்பது தொடர்பில் அமைச்சர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
எனினும் அவர்கள் அணியில் இருந்து அதிகார பூர்வமான அழைப்புகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனக் குறிப்பிட்ட அவர் அணிகளின் இணைப்பு தொடர்பில் ஏற்கனவே எமது நிலைப்பாட்டை கூறிவிட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பன்னீர் செல்வம் இவ்வாறு தெரிவித்திருப்பது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

