தமிழகத்தின் அம்மா ஜெயலலிதாவின் மறைவினைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல்வேறுபட்ட குழப்ப நிலைகள் உருவெடுத்ததோடு அ.தி.மு.க கட்சி மூன்று பிரிவுகளாக பிளவடைந்து போனது.
இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கம் சேர்த்துக் கொள்வதற்காக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் மற்றும் முதல்வர் பழனிசாமி அணியினர் பேசம் பேசி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் இந்த குற்றச்சாட்டினை கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தங்கள் பக்கம் சேர்ந்து கொள்ளுமாறு 5 கோடி வரையிலும் பேரம் பேசப்பட்டதாகவும், அதனைத் தர அவர்கள் தயாராக இருந்ததாகவும் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
தினகரன் நாளை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தினை கைப்பற்ற உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் மற்றும் பழனிசாமி அணிகள் இணைவது தொடர்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் சண்முகநாதன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டினால் கட்சி இணைப்பு சாத்தியமற்றதாக உருவாகியுள்ளதோடு, முத்தரப்பு மோதல்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

