மீண்டும் வெடிக்கும் ஜெயா மரண சர்ச்சை

331 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆவணங்கள் பத்திரமாக உள்ளதாகவும்

அப்பலோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணமடைந்து 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர் இது குறித்து தற்போது தகவல் வெளியிட்டுள்ளமை ஜெயலலிதா மரணத்தில் உள்ள முடிச்சுக்களை அவிழ்க்குமா? என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்த நாள் முதல் தொடர்ந்தும் 75 நாட்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள், கண்காணிப்பு கேமரா பேதிவுகள் போன்றவை கேட்கப்பட்டு வந்தன.

எனினும் அப்பலோ தரப்பு தொடர்ந்தும் மௌனம் சாதித்து வந்தது.

இந்த நிலையில் இன்று ஊடகங்களிடம் பேசிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது தான் சென்னையிலேயே இருந்ததாகவும், அவருடைய சிகிச்சை ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

2016 டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்த ஜெயலலிதாவின் மரணம் பலதரப்பட்ட சர்ச்சைகளை எழுப்பி தமிழகத்தை ஆட்டம் காணவைத்தது.

நீதிமன்ற தரப்பும் அவர் குறித்த விபரங்களை ஒப்படைக்குமாறு அப்பலோவை கோரியிருந்த போதும் அவற்றினை வெளியிட அப்பலோ இதுவரை மறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment