அமெரிக்காவின் செயற்பாடு சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரண் – ஈரான்

313 0

ஈரான் மீது பொருளாதார தடைவிதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தமையானது, மனித உரிமைகள் கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரணானதாகும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது சுதந்திரத்தை கோரி நிற்கும் உலக மக்கள் அனைவரும் அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா சுமத்தியுள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு கடும் கண்டனம் வெளியிட்ட அவர், 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் வகையிலான அமெரிக்காவின் செயற்பாட்டை தாம் சகித்துக் கொள்ள போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment