மரபணுக்களை மாற்றி பரம்பரை நோய்களை குணப்படுத்தும் தொழில்நுட்பம் வெற்றி

219 0

மனிதர்களின் மரபணுக்களை மாற்றி அமைத்து, பரம்பரை ரீதியில் கடத்தப்படுகின்ற நோய்களை குணப்படுத்தும் தொழில்நுட்பம் வெற்றியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் வடகொரிய விஞ்ஞானிகள் இதனைக் கண்டறிந்துள்ளனர்.

க்றிஸ்பர் என்ற இந்த தொழில்நுட்பத்தின் மூலம், பரம்பரை ரீதியாக கடத்தப்படுகின்ற நோய்களுக்கான மரபணுக்களின் கருக்களை மாற்றி அமைக்க முடியும்.

இதன் ஊடாக சுமார் 10 ஆயிரம் ஒழுங்குமுறையற்றத் தன்மைகளை சீரமைக்க வழி ஏற்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பானது மருத்துவத்தின் எதிர்காலத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் வரையில் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment