தன்னை கட்சி அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை – சசிகலாவை சந்தித்த தினகரன் பேட்டி

337 0

பெங்களூர் சிறைச்சாலையில் அ.தி.மு.க. பொதுச்செயலலாளர் சசிகலாவை, துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார்.

சிறையில் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தேன். மற்ற கைதிகளுக்கு எப்படி உணவு தரப்படுகிறேதா அதேபோல்தான் சசிகலாவுக்கும் வழங்கப்படுகிறது.

சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டு கூறிய சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும்.

நீதிமன்றமும் வழக்கும் எனக்கு பழக்கப்பட்ட விடயம்தான் என்பதால் பொறுத்திருந்து பாருங்கள்.

எனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. கட்சிப் பணிக்காக அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு நிச்சயம் செல்வேன்.

கட்சியின் துணைப் பொதுச்செயலாளரை அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

அணிகள் இணைப்புக்கு அவகாசம் அளித்தும் அவர்கள் ஒன்றிணையவில்லை.

எனக்கு ஆதரவு அளித்தால் பிரச்சனை வந்துவிடும் என்பதால் சிலர் பயப்படுகின்றனர்.

அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுக்கூட்டங்களில் பேசுவேன்.

அதேசமயம், எனக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லாததால் தற்போது எதுவும் கூற இயலாது.

நல்ல சிந்தனையாளரான கமல் அரசியலுக்கு வர விரும்பினால் வரலாம். ஊழல் தொடர்பாக அவர் தகுந்த ஆதாரத்துடன புகார் அளித்தால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment