37 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்கு!

372 0

பொகவந்தலாவை – கர்கஸ்வோல் தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவ்வழியில் சென்ற பாடசாலை ஆசிரியை ஒருவர் உட்பட37 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இந்த குளவி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது , காயமடைந்த 36 பெண் தோட்டத் தொழிலாளர்களில் 8 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் 28 பேர் தொடர்ந்தும ்சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவை மருத்துவமனையின் மருத்துவரொருவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை , குளவி தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியை மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தேயிலை மரத்தில் மீது இருந்த குளவி கூடு தொழிலாளி ஒருவரால் தவறுதலாக மிதிபட்டுள்ள நிலையில் குளவிகள் கலைந்துள்ளதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணொருவர் தெரிவித்திருந்தார்.

Leave a comment