வெடிகுண்டு மருந்துகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிள்ளைகள் ஊனமாகப் பிறக்கின்றனர்

383 0

sritharan-jaffna-tna-mp-1-450x253கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு மருந்துகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிள்ளைகள் ஊனமாகப் பிறக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் விகிதாசாரத்தை நோக்கும்போது இந்தக் குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், வடக்கு கிழக்கில் பிறக்கின்ற குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும், தேக ஆரோக்கியம் அற்றவர்களாகவும் நோய்களை தாங்கியவர்களாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சலாவ இராணுவமுகாம் ஆயுதக் கிடங்கு நாட்டு மக்களுக்குத் தந்த ஒரு படிப்பினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் எம்.ஓ.டி பெறும் நடவடிக்கை தற்போதும் அமுலில் இருக்கின்றதா? எனக் கேள்வி எழுப்பிய அவர் அதற்கான விளக்கத்தை பாதுகாப்பு அமைச்சு தரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரணைமடுத் தீவைச் சேர்ந்த 240 குடும்பங்கள் தமது இடத்தில் குடியேறுவதற்கும் அங்கு தொழில் செய்வதற்கும் அனுமதிகேட்டபோது கடற்படையினர் எம்.ஒ.டி இனைக் கொண்டுவருமாறு கூறுகன்றனர் எனவும் தெரிவித்தார்.