ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து தோல்வி

343 0

201608100927429413_Rio-Olympic-shooters-fail-to-heena-Sidhu_SECVPFரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து சொதப்பினார்.
தகுதி சுற்றில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே இறுதி சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் ஹீனா சித்து 576 புள்ளிகளுடன் 20-வது இடத்துக்கு பின்தங்கி தோல்வியை தழுவினார்.

ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் அவர் தகுதி சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.