இந்த வருட பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ரணில் விக்ரமசிங்க

226 0
இந்த வருடத்தில் நிகழும் வரட்சியான சூழ்நிலை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசாங்கம் எதிர்ப்பார்த்த போதும் கடந்த வருடத்திலும் பார்க்க பொருளாதாரம் வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியவங்கியினால் இந்த விடயம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு வழங்கப்பட்டதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை பெருமளவில் குறைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.இதனால் நாட்டின் ஏனைய கடன்களை செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வருட இறுதிக்குள் மத்தள வானூர்தி தளத்தை, துறைமுக திட்டத்துடன் இணைத்து அதன் மூலமான வருவாயை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான நடவடிக்கைகளை, பொதுப் போக்குவரத்து மற்றும் சிவில் வானூர்தி சேவைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது.இத்தகைய, செயற்திட்டங்களின் மூலம் நாட்டின் பொருளாதார வேகத்தை அதிகரிக்க முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a comment