புறக்கோட்டையில் 3 நிறுவனங்கள் மூடல்

560 0

w.market clothes.1சட்டவிரோதமான முறையில் ஆடைகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் புறக்கோட்டையில் உள்ள 3 பிரபல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் ஆடைகள் கொண்டுவரப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, குறித்த வர்த்தக நிலையங்கள் சுங்க திணைக்களத்தினால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.

இதன்போது குறித்த நிறுவனங்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத நிலையில் அவை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் கீழ் நான்கு வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.

இதன்போது ஒரு நிறுவனம் உரிய ஆவணங்களை நிதி அமைச்சிடம் கையளித்திருந்த நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.