அமெரிக்காவை முழுமையாக தாக்கும் ஏவுகணைகளை தம்மிடம் உள்ளன – வடகொரியா

388 0

அமெரிக்காவின் சகல பகுதிகளையும் தம்மிடம் உள்ள ஏவுகணைகளை கொண்டு தாக்கமுடியும் என வடகொரியா எச்சரித்துள்ளது.

வடகொரிய ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது தாக்குதல் இலக்குக்குள் அமெரிக்காவின் சகல பகுதிகளும் வந்துள்ளதாக ஜனாதிபதி கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நேற்று நடத்தியதாக சர்வதேசம் தகவல் வெளியிட்டிருந்தது.

சோதனையிடப்பட்ட ஏவுகணையானது ஜப்பான் கடற்பரப்பில் வீழ்ந்ததாகவும் ஜப்பான் குறிப்பிட்டது.

இருந்த போதிலும் வடகொரியாவின் இந்த ஏவுகணை குறைந்த அளவிலான தூரத்தையே சென்று தாக்கக் கூடியது என ரஷ்யா அறிவித்திருந்தது.

இதற்கமைய இந்த மாதத்தில் 2 ஏவுகணை சோதணைகளை வடகொரியா மேற்கொண்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்கதக்கது.

 

Leave a comment