காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இவ்வாறு கரையொதுங்கிய சடலமானது 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆணுடையதெனவும் குறித்த நபர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீட்கப்பட்டுள்ள சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

