கல்குடா விநாயகபுரம் பகுதியில் நடமாடும் பொலிஸ் நிலையம்

202 0

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் ´கிராமிய மக்களுக்கு காலடியில் பொலிஸ் சேவை´ எனும் தொனிப் பொருளில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் ஒரு மாதத்திற்கான நடமாடும் பொலிஸ் சேவை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் பகுதியில் நடமாடும் பொலிஸ் சேவை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கே.கீரகல தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சமூகப் பொலிஸ் ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரட்ணத்தினம் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தயாரத்ன, பிரதேச கிராம சேவை அலுவலர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சமூகப் பொலிஸ் ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரட்ணத்தின் மேற்பார்வையில் ஒரு மாத காலத்திற்கான பொலிஸ் நடமாடும் சேவை நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment