அருண் ஜேட்லி கருத்தால் மாநிலங்களவையில் அமளி

21593 0
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்த கருத்தால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, அவை விதி எண் 267ன் கீழ் ஒரு பிரச்சினையை எழுப்ப விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் பல உறுப்பினர்கள் இதே விதியின் கீழ் ஒத்திவைப்பு தீர்மான மனு கொடுத்தனர்.
ஆனால், அவையை நடத்திய துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அனுமதி மறுத்தார்.
அதேநேரம், ஆனந்த சர்மாவை பேச அனுமதித்தார்.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் புகழைக் கெடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக சர்மா குற்றம் சாட்டினார்.
அப்போது, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குறுக்கிட்டு, விளம்பரத்துக்காக ஒத்திவைப்பு தீர்மான மனு வழங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜேட்லியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
ஜேட்லியின் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றுகோரினர்.

Leave a comment