இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் இல்லை –  சுஷ்மா 

426 0
இராக்கின் மொசூல் நகரிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2014 ஜூன் மாதம் கைப்பற்றினர்.
அதன்பிறகு, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பஞ்சாப் மாநில தொழிலாளர்கள் 40 பேர் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.
இவர்களில் ஒரு தொழிலாளி மாத்திரம் தப்பி வந்தார்.
ஏனைய 39 பேர் குறித்த தகவல் இதுவரையில் இல்லை.
அந்த தொழிலாளர்களை ஈராக் அரசின் உதவியுடன் கண்டறிய இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது.
இந்த நிலையில் அவர்கள்; மொசூல் நகருக்கு அருகில் உள்ள படுஷ் சிறையில் இருக்கலாம் என நம்பப்படுவதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த தினம் தெரிவித்திருந்தார்.
எனினும் படுஷ் சிறை தீவிரவாதிகளால் ஏற்கனவே கைவிடப்பட்டு, பாழடைந்த நிலையில் இருப்பதாக செய்தி வெளியானது.
இதனால் இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் கருத்து தெரிவித்த போது 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment