பிஹார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார் –  பாஜகவின் சுஷில் குமாருக்கு துணை முதல்வர் பதவி

485 0

பாஜக ஆதரவோடு பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் 6வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பதவியேற்றார்.
ராஜ்பவனில் நடந்த விழாவில் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் மற்ற அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 2 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்.

Leave a comment