முன்னாள் வான்படை தளபதிக்கு இறுதி அறிவுறுத்தல்

218 0
முன்னாள் வான்படை தளபதி ஏயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரமவுக்கு, நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இறுதி ‘முன்னிலைப் படுத்தக் கோரும் கட்டளை அறிவுறுத்தலை பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பெயரைப்பயன்படுத்தி, இடமாற்றம் ஒன்றை நிறுத்துமாறு கோரி முன்னாள் வான்படை தளபதி தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்  போதே இந்த கட்டளையை பிறப்பித்தார்.
இந்த வழக்கின் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டவரின் சாட்சியாக முன்னாள் வான்படை தளபதிக்கு இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாகு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவர் இன்றைய தினமும் மன்றில் முன்னிலையாகாத நிலையிலேயே இவ்வாறு இறுதி ‘முன்னிலைப் படுத்தக் கோரும் கட்டளை அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி, முன்னாள் வான்படை தளபதி ஏயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம இவ்வாறு  தொலை பேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, அரச வாகனங்களை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் 10 லட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகையை அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிரான வழக்கு விசாரணைகளும் எதிர்வரும் நொவம்பர் மாதம் 23ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Leave a comment