நாட்டில் இன்று சொந்த நலன்களுக்காக தொழிற்சங்க போராட்டம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு 

189 0
நாட்டில் இன்று சொந்த நலன்களுக்காக தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த குற்றச்சாட்டை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
இதில் பங்கேற்று உரையாற்றிய சுமந்திரன், அரசாங்க மருத்துவர் சம்மேளனத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மருத்துவர்கள் பதவியேற்கின்ற போது செய்துக் கொள்கின்ற சத்தியப்பிரமாணத்துக்கு மாறாகவே அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
இதன்காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எந்த ஒரு சேவையை எடுத்துக் கொண்டாலும், அது அத்தியாவசிய சேவையாகவே கருதப்பட வேண்டும்.
நாட்டின் வரிசெலுத்துவோர் என்ற பிரிவு இருக்கும் நிலையில், சாதாரண பொதுமக்களும் மறைமுக வரியை செலுத்தி வருகின்றனர்.
எனவே அவர்களுக்கு சேவையாற்ற வேண்டியது அரச சேவையாளர்களது கடமையாக இருக்க வேண்டும்.
இதனைவிடுத்து தனிப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்துவது ஏற்புடையது இல்லை.
இந்த நிலையில் அரசாங்கம் நேற்று அத்தியாவசிய சேவை வர்த்தமானியை வெளியிட்டமையை தாம் வரவேற்பதாக கூறிய சுமந்திரன், அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அரசாங்கம் உதவியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டு செய்தி
வடக்கு மாகாண சபையில் சுழற்சி முறையின் அடிப்படையில் உறுப்பினராக பதவி வகித்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் செந்தில்நாதன் மயூரன், இன்று தமது நிலையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சுழற்சி முறை அடிப்படையில் ஒருவருடகாலம் முடிவடைந்த நிலையிலேயே இந்த விலகலை அவர் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து அந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு புதியவர் ஒருவரை பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தீர்மானம் அடுத்தவாரம் நடைபெறவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று, டெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Leave a comment