கிளிநொச்சியில் சட்டவிரோத மது ஒழிப்பு வழிப்புணர்வு ஊர்வலம்

266 0
சட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று புதன் கிழமை காலை பத்து மணிக்கு கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட    ஊர்வலமானது  கிளிநொச்சி டிப்போச்  சந்திக்கருகில்   ஆரம்பமாகி   கிளிநொச்சி  மாவட்டச் செயலகம்   வரை சென்றடைந்து அங்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மது பாவனையால் குடும்ப வன்முறைகள், முரண்பாடுகள் கிராமங்களில் அதிகரித்து காணப்படுகிறது என்றும் எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்தின் போது வன்முறையை தூண்டும் மது பாவனையை தடுக்க ஒன்றிணைவோம், மதுவால் எதிர்காலத்தை வீணடிக்காதே, கசிப்பை உற்பத்தி செய்யாதே, மதுவை வெறு, மதுவை வெறு மகிழ்வு உன்னை தேடும், உடலை வதைக்கும் மதுவுக்கு அடிமையாகதே, போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.

Leave a comment